கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பாய்லர் இயந்திரம் துவக்கி வைத்தல் மற்றும் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் காந்திய, உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பாய்லர் இயந்திரம் துவக்கி வைத்தல் மற்றும் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் முன்னிலை வகித்தார். தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி 51.70லட்சம் மதிப்பீட்டில் புதிய பாய்லர் இயந்திரங்களை துவங்கி வைத்தார். தொடர்ந்து முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 33 அங்கத்தினருக்கு 27 லட்சம் மதிப்பீட்டிலும், நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 32 பயனாளிகளுக்கு 5.90லட்சம் மதிப்பீட்டிலும் நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 13 பயனாளிகளுக்கு 18 லட்சம் மதிப்பீட்டிலும் மொத்தம் 102.60 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேசுவையில் நெசவுத்துறையில் பல்வேறு நலத்திட்டங்களை முதல்வர் அறிவிக்க காரணம் திருபுவனம் தான், தீபாவளி போனசில் 40பைசா வழங்கிய அமைச்சருக்கு இது ஒரு விதத்தில் பாராட்டுவிழா தான் மீனவர்களுக்கு வழங்குவதை போல் நெசவாளர்களுக்கு மழைகாலத்தில் உதவி தொகை வழங்க வேண்டும் தேக்கமடைந்த பட்டுப்புடவைகளுக்கு 15%தள்ளுமடி வழங்க வேண்டும் எனக்கூறினார்.
தொடர்ந்து கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில்..
நான் அமைச்சராக பொறுப்பேற்போது முதல்வர் கைத்தறித்துறையை எனக்கு தந்தார் திமுக அரசு பொறுப்பேற்கும் போது நெசவாளர்கள் காக்கப்படுவார்கள் அந்த அடிப்படையில் தற்போது செயல்பட்டுவருகிறது. நெசவாளர்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுவது தமிழக முதல்வர் தான், கொரோனா காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்தனி அமைச்சர்கள் நியமித்து திறம்பட செயல்பட வைத்தது தமிழக முதல்வர் தான், ஒவ்வொறு மாநிலங்களும் நம் மாநிலத்தை பார்த்துதான் மாதிரியாக நடத்துகிறார்கள். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் இப்பகுதி நெசவாளர்களின் நலம் கருதி அவர்களின் கோரிக்கையை ஏற்று கொரோனா கால கடன் தொகையை பொது நிதியிலிருந்து விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மேலும் நெசவாளர்களின் கோரிக்கையை பரிந்துரை செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறினார்
இந்நிகழ்ச்சி மாநிலங்களவை எம்.பி. கல்யாண சுந்தரம், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி முன்னாள் எம்பி ராமலிங்கம், கும்பகோணம் எம்.எல்.ஏ அன்பழகன், கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சுப.தமிழழகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் உஷா புண்ணியமூர்த்தி, திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுபா திருநாவுக்கரசு, கூட்டுறவு சங்க செயலாட்சியர் கிரிதரன், கைத்தறித்துறை செயலர் அமுதவள்ளி இயக்குநர் சண்முகசுந்தரம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.