தஞ்சாவூர் வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட அய்யனார் கோயில் புறவழிச்சாலை அருகே தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்படும் 13 அடுக்கு மாடி குடியிருப்பு கட்டுமானத்தில் 969 வீடுகள் கட்டப்பட்டுள்ளன இதில் சுமார் 150 கோடி ரூபாயில் பெருமளவில் ஊழல் நடந்துள்ளது என்று கூறி ஊழலைக் கண்டித்தும் ஏழை, நடுத்தர மக்களின் உயிர் பாதுகாப்பு கருதியும் தரமற்ற கட்டுமானத்தை நிறுத்தக்கோரி ஊழலில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள், அரசு பொறியாளர்கள், தரச்சான்று அளித்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வல்லம் பேருந்து நிலையத்தில் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ச. தமிழன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

         இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் விடுதலை வேந்தன் வரவேற்றார், கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் மண்டல செயலாளர் விவேகானந்தன், நில உரிமை மீட்பு இயக்க மாநில துணை செயலாளர் வீரன். வெற்றி வேந்தன், முன்னாள் மாவட்ட செயலாளர் தங்க.முருகானந்தம், விவசாய அணி தமிழ் வளவன், நாடாளுமன்ற தொகுதி துணை செயலாளர் கிள்ளி வளவன், முன்னாள் மாநகர செயலாளர் மார்ட்டின். மாவட்ட தொண்டரணி செல்வகுமார், சட்டமன்றத் தொகுதி செயலாளர் சக்கரவர்த்தி. ஒன்றிய செயலாளர்கள் நாகத்தி வினோத். வயலூர் பரத். அரசு. வணங்காமுடி. துரை. பிரபு. செந்தில் சிலம்பரசன். இளங்கோ. பசுபதி வளவன். இனியன். மறியல் வினோத். அரங்க. குரு. சிவாஜி. சங்கர். லாசர். நகர செயலாளர் நெல்சன். மகளிரணி பொறுப்பாளர்கள். ராசாத்தி. மலர் கொடி, நவ்ரோஸ்பேகம். சகிலாபானு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *