மேட்டுப்பாளையத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும்மேலாக தமிழ்ச்சங்கம் செயல்பட்டு வருகிறதுமேட்டுப்பாளையம் சேரன் பணிமனைக்கு எதிரே உள்ள தமிழ்ச் சங்க கட்டட அரங்கத்தில் இன்று தமிழ் இலக்கிய கூட்டம்தமிழ் சங்கத் தலைவர் கி து சா சோலைமலை தலைமையில் நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு.தமிழ் சங்க பொதுச் செயலாளர் ரங்கசாமி முன்னிலை வகித்தார்,இயக்க செயலாளர் முன்னாள் ஆசிரியர் ஜெயராம்வரவேற்பு உரை ஆற்றினார்.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டஆசிரியர் சிவ சக்தி வடிவேல் வேர்களைத் தேடி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.அப்பொழுதுயாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் பாடல் ஐநா சபை வரை சென்றடைந்தது தமிழ் மொழிக்கு சிறப்பாகும் என்று கூறினார். மேலும் வாழ்க்கையில் மிகுந்த சோகம் வரும் பொழுது துவண்டு போகக்கூடாது, இடையூறுகளை கடந்து தான் நாம் வாழ்க்கையை இன்பமயமாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாழ்க்கை என்பது கொண்டாடுவதற்காகத்தான் என்றும் உரையாற்றினார்.
மேலும் மனதில் எப்பொழுதும் நல்ல சிந்தனைகளையே வளர்த்துக் கொள்ள வேண்டும் தேவையில்லாத சிந்தனைகளை
வளர்த்துக் கொள்ளக் கூடாது.ஒரு நிலத்தில் நெல் விதைத்தால் நெல் முளைக்கும் திணை விதைத்தால் திணை முளைக்கும் ஆனால் தரிசாக இருக்கும் நிலத்தில் களை முளைக்கும் ஆகவே மனதில் நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் தேவையில்லாத துன்பங்கள் மனதில் எழாது என்று பொருள்படும்படி பேசினார்.நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர் முன்னாள் ஆசிரியர் ஏ.வி. ராமசாமி .பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஜெயராமன் சீனிவாசன் மகேந்திர குமார் உட்படஏராளமான தமிழ் ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ்ச்சங்க பொருளாளர் பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்தார்