அரியலூர் மாவட்ட காவல்துறை கொலை,கொள்ளை, போதைப் பொருள், மற்றும் வெடிகுண்டு வைத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காகவும், வைக்கப்படும் இடங்களை மோப்பம் பிடித்து கண்டுபிடிக்கவும் மலர்,பீணா ,ரோஸ் மற்றும் சீமா என 4 துப்பறியும் மோப்ப நாய்கள் உள்ளன. இதில் ரோஸ் என்ற துப்பறியும் காவல்துறை மோப்பநாய் வயது மூப்பின் காரணமாக ஓய்வு பெறுகிறது.

இந்நிலையில் 11.11.2024 இன்று லாப்ரடோர் ரெட்ரீவர் வகையைச் சேர்ந்த ஒரு நாய்க்குட்டி அரியலூர் மாவட்ட காவல்துறையில் சேர்க்கப்பட்டது.

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் .G.கார்த்திகேயன் I.P.S., புதிதாக அரியலூர் மாவட்ட காவல்துறையில் சேர்க்கப்பட்ட நாய்க்குட்டிக்கு மோனா என்று பெயர் சூட்டினார்கள். இந்நிகழ்வின் போது திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் .M.மனோகர் I.P.S., அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S.செல்வராஜ் உடன் இருந்தார்கள் .பின்னார் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள் மோனா-வை அரியலூர் மாவட்ட காவல்துறை மோப்ப நாய் பிரிவினர் .செல்வகுமார் (தலைமை காவலர்) வழங்கினார்கள்.

மேலும் மோனா என்ற புதிய நாய்க்குட்டி 6 மாத கால அடிப்படை பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்படும். பயிற்சிக்கு பின்னர் மீண்டும் அரியலூர் மாவட்ட காவல்துறை மோப்ப நாய் பிரிவில் பணிபுரிய தொடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *