கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
வேலம்பட்டி சுங்கச்சாவடி சுழற்சி முறையை அறிந்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் தொடர் காத்திருப்பு போராட்டம்……
நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னர் டோல்கேட் பணியை தொடர வேண்டும் என நூற்றுக்கு மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு…….
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அவிநாசி முதல் அவிநாசி பாளையம் வரையிலான சாலையில் வேலம்பாளையம் பகுதியில் டோல்கேட் பணியானது நடைபெற்று வருகிறது மேலும் நாளை முதல் நடைமுறைக்கு வரும் நிலையில் இன்று மாலையிலிருந்து பல்வேறு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து நீர் நிலை ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட டோல்கேட் கட்டிடத்தை டோல்கேட்டையும் அப்புறப்படுத்த கோரி நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் மட்டும் பல்வேறு கட்சியினர் ஒன்று திரண்டதால் வேலம்பட்டி டோல்கேட் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது மேலும் அக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் காத்திருப்போராட்டமானது முடிவு பெறாது எனவும் இதனால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் டோல்கேட் பணியை நூற்றுக்கு மேற்பட்டோர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
