திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அவிநாசிபாளையம் பகுதியில் அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வரை சாலை விரிவாக்க பணியானது கடந்த சில வருடங்களுக்கு நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து சுங்கச்சாவடி கட்டப்பட்டதாக கோரி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதனை அகற்ற கோரிக்கை வைத்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நல்லிரவு சுங்கச்சாவடி திறக்கப்படும் என அறிவிக்கப்படிருந்த நிலையில் நேற்று இரவே அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.இந்த நிலையில் இன்று காலை போராட்டக்காரர்களை பேச்சு வார்த்தைக்கு மாவட்ட ஆட்சியர் அழைத்திருந்தார்.
தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என அவர் உத்தரவிட்டதை தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.
இதன் காரணமாக இப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீசார் குவிக்கப்படுள்ளனர்.மேலும் சுங்கச்சாவடி அருகே உள்ள ஐந்து பஞ்சாயத்தை சேர்ந்த மக்களுக்கு சுங்க கட்டணம் இல்லை என்றும் திருப்பூர் மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு ஐம்பது சதவீத தள்ளுபடி என்றும் விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசம் என்றும் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது.