கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் 37 ஆயிரம் பணம் திருடியவர் அதிரடி கைது….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் உள்ள பாலக்கரையில் கடந்த தீபாவளி அன்று சீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்த சேகர் என்பவருடைய 37 ஆயிரம் பணம் இருசக்கர வாகனத்தில் விழுந்த போது மர்ம நபர் திருடி சென்று விட்டனர்.
தகவலறிந்த கபிஸ்தலம் போலீசார் வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையில் போலீசார் திருடிய நபரை தேடி வந்த நிலையில் திருவெறும்பூர் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமாரன் என்பவர் கைது செய்து இருசக்கர வாகனம் பணம் ஆகியவை பறிமுதல் செய்து அவரை கைது சிறையில் அடைத்தனர்.