சபரிமலை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் விடுமுறைக்கு மும்பை – நெல்லை வழி பன்வெல், மட்காவ், மங்களூர், கொல்லம், புனலூர், தென்காசி, அம்பை இடையே சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என
மத்திய ரயில்வே CPTM குஷால் சிங்கை சந்திக்க மும்பை சி எஸ் எம் டி அலுவலகத்துக்கு சென்றிருந்தேன் அவருக்கு ப்ரோமோஷன் கிடைத்து மாற்றலாகிவிட்டார். புதிய CPTM இன்னும் வரவில்லை ஆகையால் STM ( COG) & Coaching dept manager ஆகிய இருவர்களை சந்தித்து சிறப்பு ரயில் இயக்க மனு அளித்தேன்.

அவர்களிடம் நடந்த உரையாடல்

தீபாவளி & சாத்த பூஜாவுக்கு மத்திய ரயில்வே 34 + special train அறிவித்தது ஆனால் தமிழ்நாட்டுக்கு ஒரு சிறப்பு ரயில் கூட அறிவிக்கவில்லை ??.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கேரளா
வை சார்ந்த ஐந்து எம் பி , மூன்று எம் எல் ஏ பரிந்துரை கடிதம் கூட கொடுத்துவிட்டோம்

நாங்கள் central railway AGM, CPTM, PCOM,
Southern railway GM – Nellai & Chennai,
DRM- Madurai, Trivandrum , Palakadd,

Railway minister for state Mr. Somnath – Bangalore office

Central railway minister – Mr Ashwini Vaishnav. – Mumbai
பலரை சந்தித்து மனு அளித்துவிட்டோம்

நாங்கள் அளித்த மனுவை பரிசீலனை செய்து மத்திய ரயில்வே சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே க்கு Proposal அனுப்பியது தென்னக ரயில்வே கொங்கன் ரயில்வே ஒப்புதல் கொடுத்து புதிய வழித்தடத்தில் இயக்க concurrence/approval அனுமதி அளித்தது ஆனால் ரயில் பெட்டிகள் Rake இல்லை னு ரயில் இயக்க வில்லை??.

ஏன் என கேட்டேன் எங்களுக்கு மேலே Railway board இருந்து எந்த உத்தரவு வரவில்லை. ரயில் பெட்டிகள் Rake இல்லை னு எதோ பதில் சொல்லி மழுப்பினார்கள் .

சரி சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் வருகிறது இந்த காலத்தில் இயக்குங்கள் என கேட்டேன்

LTT – Kochuveli/Trivandrum north சிறப்பு ரயில் 21.11.2024 உடன் நிறைவடைகிறது அந்த ரயில் பெட்டியை Rake எங்களுக்கு கொடுங்கள் என கேட்டேன் .
கொடுக்கிறோம் ஆனால் மூன்று மாதம் 22.11.2024 – 21.1.225 சிறப்பு ரயில் இயக்க முடியாது..

ஒரு குறிப்பிட்ட தேதி சொல்லுங்கள் இயக்குகிறோம் என்றார்கள்

ஆலோசித்து இயக்க வேண்டிய தேதியை குறிப்பிட்டு இன்னொரு கடிதம் தருகிறேன் னு சொல்லிட்டு வந்துவிட்டேன்

எந்த தேதியை அறிவிக்கலாம்??.

குறிப்பு :- மஹாராஷ்ட்ரா தேர்தல் 20.11.2024 , கும்பமேளா னு வருவதால் மறுபடியும் ரயில் பெட்டி Rake கிடைக்கலன்னு சொல்லி நம்ம தமிழ்நாட்டுக்காரர்களை புறக்கணிக்கலாம் .
இந்தமுறை ரயில்வே அமைச்சர்,
ரயில்வே போர்டு மூலம் அழுத்தம் கொடுப்போம் இந்தமுறை ரயில்வே அமைச்சர்
ரயில்வே போர்டு மூலம் அழுத்தம் கொடுப்போம் ஒரு முறை சிறப்பு ரயில் இயங்கி விட்டால் ஒவ்வொரு ஆண்டும் இயங்கும்.
பின்னர் நிரந்தரம் ஆகிவிடலாம்..

பின்னர் மற்ற கோரிக்கையும் பார்க்கலாம் .

சிறீதர் தமிழன் (ஸ்ரீதர்),மும்பை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *