பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த இரவாங்குடி கிராமத்தில் வசித்து வரும் பத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்கள் விவசாய நிலம் மற்றும் கோவிலுக்கு சென்று வரும் பாதையை மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு அளித்தனர்
இறவாங்குடி கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தி வரும் பொது பாதையை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் திமுக கிளை தலைவர் ஆகியோர் சட்ட விரோதமாக பொதுப்பாதையை ஆக்கிரமித்து கடந்த சில ஆண்டுகளாக அனுபவித்து வருவதாகவும் அதனை மீட்டு தரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவித்தனர்
இதுகுறித்து தங்கள் நிலத்துக்கு செல்லும் பாதையை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டுத் தர வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள் இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இனியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அமைதி போராட்டத்தில் ஈடுபடுவோம் என செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதில் முப்பதுக்கு மேற்பட்ட ஊர் பொதுமக்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.