கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடம் அருகே கழிவுகளை கொட்ட வந்த கேரளா மாநில பதிவு எண் கொண்ட லாரி சிறை பிடிப்பு…..
பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு….
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வடுகபாளையம் புதூர் பஞ்சாயத்துக்கூட்பட்ட வினோ பாஜி நகரில் கேரளா மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்று நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது

தொடர்ந்த அங்கு சென்று பார்த்தபோது லாரியிலிருந்து கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு வருவதை அறிந்த அப்பகுதி மக்கள் திடீரென லாரியை சிறை பிடித்தனர்
மேலும் லாரியில் உள்ள கழிவு பொருட்கள் மருத்துவப் பொருள்கள் உள்ளிட்டவைகள் இருந்ததன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர் மேலும் ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த பகுதியினர் லாரி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.