தேசூர் ஊராட்சி பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தேசூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் என். அனந்தராஜன் வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுனர் பிரபு, பள்ளி மேலாண்மை குழு தலைவர் வரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர்கள் பச்சையப்பன், உமாமகேஸ்வரி, சத்துணவு அமைப்பாளர் புவனேஸ்வரி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினர். மேலும் மாணவர்கள் கேக் வெட்டி விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள்.
இதில் மாணவர்கள் பங்கேற்ற பேச்சுப்போட்டி, பரதநாட்டியம், ஓவியப்போட்டி உள்ளிட்டவை நடைபெற்று பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் ஆசிரியர் பச்சையப்பன் நன்றி கூறினார்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.