சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியில் குழந்தைகள் தின விழா.
நவம்பர்.14, கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி அரசு கள்ளர் ஆரம்பப் பள்ளியில் இந்தியாவின் முன்னாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாள் பள்ளி குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தலைமை ஆசிரியர் மேகலா மற்றும் அன்பு அறம் செய் சுருளிப்பட்டி அன்பு ராஜா மாணவர்கள் மத்தியில் உரையாற்றும்போது ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினத்தையே நாம் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம்,அவர் தனது சட்டையில் எப்போதும் ரோஜா மலரை வைத்திருப்பார், நாட்டுப் பற்று மிக்கவர்,குழந்தைகள் மீது அதீத அன்பு உடையவர் என்று கூறி இன்றைய மாணவர்கள் நாளைய பெரும் தலைவராக வருவதற்கு கல்வி ஒன்றே நம் உயர்வுக்கு முதற்படி என்றும் கல்வியின் சிறப்பைப் பற்றியும், மாணவர்களின் ஒழுக்கத்தை பற்றியும் எடுத்துக் கூறி மாணவர்களுக்கு எழுதுகோல் பரிசாக வழங்கப்பட்டது.