பாரைப்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ அடைக்கலம் காத்த அய்யனார் ராஜாத்தி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாரைப்பட்டி ஊராட்சியில்
ஸ்ரீ அய்யன் அடைக்கலம் காத்த அய்யனார், ராஜாத்திஅம்மன்
திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, அதனை தொடர்ந்து முதல் கால யாகவேள்வி ஆரம்பமாகி மகா பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டாம் கால யாகபூஜையுடன் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு ஸ்ரீதர்ஐயர், தலைமையிலான சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் கோவில் கருவறையில் அமைந்துள்ள சுவாமிகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு பூஜை மலர்களும், பிரசாதமும், வழங்கப்பட்டது இந்த விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமிமுத்தையன், கலந்து கொண்டார்
அவருக்கு விழா கமிட்டி சார்பாக கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றனர் பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானத்தினை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.