கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே அம்மாபேட்டையில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மது பாட்டிலுடன் இருவர் கைது..
75-பிராந்தி பாட்டில்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார்..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அம்மாபேட்டை காவல் சரகத்தில் குற்றங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் வாகன சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அப்போது முருகன் கோயில் பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்லப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் இளவரசு, உதவி ஆய்வாளர் சித்ரா தலைமையில் காவலர்கள் அடங்கிய குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக இரண்டு சக்கர வாகனத்தில் வந்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா பகுதியை சேர்ந்த சின்னராஜ் (20) மற்றும் சசிகுமார் (48) ஆகியோரிடம் சோதனையில் ஈடுபட்ட போது, அவர்களிடம் சட்டை விரோதமாக விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 75-மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக அவர்களிடம் இருந்த மது பாட்டில் மற்றும் மது பாட்டிலை ஏற்றி வருவதற்கு பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.