விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தேவதானம் மேற்கு பகுதியில் சாஸ்தா கோவில் அணை உள்ளது இந்த அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி வீதம் இன்று முதல் 24 ஆம் தேதி வரை ஏழு நாட்களுக்கு முழுமையான அளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதே போல அணைக்கு நீர்வரத்து மற்றும் நீர் இருப்பினை கருத்தில் கொண்டு 48 நாட்களுக்கு பாசனத்திற்காக கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து விட உள்ளது. இதன் மூலம் 11 கண்மாய்களுக்கு 2,700 ஏக்கர் மற்றும் நேரடி பாசனம் மூலம் 452 ஏக்கர் ஆக மொத்தம் 3600 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த அணை தண்ணீர் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் திறந்து வைத்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தனலட்சுமி, உதவி செயற் பொறியாளர் ஜெய்சங்கர், உதவிப் பொறியாளர்கள் ஜான்சி, பொன்குரு, ராஜ பிரியா மற்றும் வனத்துறை,சேத்தூர் காவல்துறையினர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சட்டமன்ற உறுப்பினருடன் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், சேத்தூர் செயலாளர் சிங்கம்புலி அண்ணாவி, ஒன்றிய அவை தலைவர் மிசா நடராசன், தேவதானம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *