வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர்
துறையூரில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சிலை அமைக்க இடம் ஒதுக்க கோரி பாஜகவினர் நகராட்சி ஆணையரிடம் மனு
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாய் சிலையை துறையூர் பஸ் நிலையத்தின் முன்புறம் நிறுவ இடம் வழங்க அனுமதி தரக்கோரி துறையூர் நகர தலைவர் சரவணன் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் செந்தில்குமார், பிரச்சார பிரிவு மாநில செயலாளர் சம்பத்குமார் முன்னிலையில் துறையூர் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்றுகொண்ட ஆணையர் இதை பரிசீலனை செய்வதாக கூறினார். இதில் நகர நிர்வாகிகள் நாகராஜன், மனோகரன், ஹரிஷ், இளைஞர் அணி நிர்வாகிகள் பாஸ்கர் ,கோகுல் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.