கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 88 வது குருபூஜை விழா திருவாரூரில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்……
திருவாரூர் நகராட்சி எதிரில் வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ. உ .சிதம்பரம் பிள்ளை அவர்களின் 88வது குருபூஜையை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் திருவாரூர் நகரில் வ.உ.சிதம்பரனார் அவர்களுக்கு மணிமண்டபம் மற்றும் அவரது நினைநாளை அரசு விழாவாக எடுக்க வலியுறுத்தியும், கப்பலோட்டிய தினத்தை வணிகர் தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து அன்னதானம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சிக்கு திருவாரூர் நகர மன்ற உறுப்பினரும் திமுக நகர செயலாளருமாகிய வாரை. பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் கடாரம். பாஸ்கரன் கலை வேலன் நகர்மன்ற உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வின் சிறப்புரையாக குடவாசல் சாமி.தினேஷ் மாவட்ட தலைவர், கோவி. ராமலிங்கம் மாவட்ட செயலாளர், சோ. அய்யன் மாவட்ட பொருளாளர்,ரமேஷ் குமார் ஒன்றிய செயலாளர், வர்த்தக அணி பாதுகாப்பு தலைவர் ராஜேந்திரன், கவிஞர் ஜெயக்குமார் ஆகியோரும் மேலும் நிகழ்ச்சியின் நன்றியுரையாக சோழா.முருகன் நகர பொருளாளர். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மற்றும் சங்கம் சார்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கி நிகழ்ச்சி நடைபெற்றது..