வலங்கைமானில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக இந்தியாவின் இரும்பு பெண்மணி அன்னை இந்திராகாந்தியின் 107- வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சார்பதிவாளர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக இந்தியாவின் இரும்பு பெண்மணியும், இந்திய முதல் பெண் பிரதமர் அன்னை இந்திரா காந்தி அவர்களின் 107- வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
அவரின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் திருவாரூர் மாவட்ட தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் இந்தியாவின் இரும்பு பெண்மணியும், இந்திய முதல் பெண் பிரதமர்அன்னை இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை விரிவாக பேசினார்.
நிகழ்ச்சியில் வலங்கைமான் நகர காங்கிரஸ் முன்னால் தலைவர் கலியமூர்த்தி கலந்து கொண்டு பேசினார், நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. முடிவில் நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.