தாராபுரம் தாலுக்கா கொக்கம்பாளையம் கிராமம் புல எண் 253/15 மரவாபாளையம் குளத்தில் வண்டல் மண் கிடையாது முழுக்க முழுக்க கிராவல் மண் மட்டுமே உள்ளது வண்டல் மண் எடுப்பதாக அனுமதி பெற்று விட்டு கிராவல்மண் எடுக்கப்பட்டு விற்பனைக்கு பத்துக்கும் மேற்பட்ட லாரிகளில் திருப்பூர் கொண்டு செல்லப்படுகிறது
அரசுக்கு சொந்தமான குளத்தை வியாபார நோக்கத்துடன் சூறையாடப் படுகிறது இது குறித்து தாராபுரம் வட்டாட்சியரிடம் தகவல் கூறியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை அண்மையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கனிம வளம் குறித்து வழங்கிய உத்தரவு மீறி தாராபுரம் பகுதியில் உள்ள குளங்களில் வணிக ரீதியான செயல்பாடுகளுக்கு மண் எடுக்க தாராபுரம் வட்டாட்சியர் எவ்வித ஆய்வுகளும் செய்யாமல் அனுமதி வழங்கி வருகிறார் மேலும் குளத்தில் எடுக்க வேண்டிய அளவு ஒரே நாளில் பத்துக்கு மேற்பட்ட லாரிகளை வைத்து எடுக்கப்பட்டுவிட்டது
எனவே மாவட்ட நிர்வாகம் மறவபாளையம் குளத்திற்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என உயர்திரு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை மறவாபாளையம் விவசாயிகள் சார்பாக கேட்டுக்
கொள்கிறோம்.