தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்தியப் பள்ளி ஆசிரி யர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் மாவட்ட நிதிக் காப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி தலைமை வைத்தார்.
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்பு சங்க நிர்வாகிகளான சந்திரன், கணேசன், சரவணகுமார், பாரதி வளனரசு, ஸ்ரீரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எமிமாள் ஞான செல்வி, இந்திரா காந்தி, நீதி ராஜா, கார்த்திகேயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப் பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை ரமணி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு பணிப் பாது காப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.