தர்மபுரி மாவட்டம் கடத்தூர் யூனியனுக்கு உட்பட்ட ஓசஅள்ளி ஊராட்சியில் வேடியூர், போசி நாயக்கனஅள்ளி, புதுப்பட்டி , பாசாரபட்டி . இராணி மூக்கனூர்.பூவன் நகர், காண்டுதோட்டம் , உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இதில்
புதுப்பட்டி காலணி பகுதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக போதிய குடிதண்ணீர் இல்லாத நிலையில் கடும் அவதிபட்டு வந்தனர். இந்த நிலையில் இப்பகுதி மக்களுக்கு , அரசு சார்பில் ரூபாய் 23 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 3 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை டேங்க் அமைக்கப்பட்டது. அதற்கென போடப்பட்ட புதிய போர்வெல்லில் தண்ணீர் வராத நிலையில் அப்பகுதியில் மக்கள் மீண்டும் தண்ணீர் தட்டுபாட்டில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அன்றாட குடிநீர் தேவையை அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து தேவையை பூர்த்தி செய்து வரும் நிலைக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய கட்டப்பட்ட டே ங்க் தற்போது காட்சி பொருளாகவே மாறி வருகின்றது. இவர்களின் குடி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய உடனடியாக. மாற்று புதிய ஆழ்துளை கிணறு அமைத்து டேங்க்கு தண்ணீர் கொண்ட வர அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் புதிய டேங்க் அருகில் திரண்டு காலிக்குடங்களுடன் காத்திருந்தனர். தகவல் அறிந்து அங்கு சென்ற ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தங்களின் தண்ணிக் தட்டுபாட்டை தீர்க்க மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்க எடுப்பதாக பேசி கூறிய பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து (சரண்யா ) கூறுகையில் எங்கள் பகுதிக்கு 40 ஆண்டு காலமாக மேல்நிலை டேங்க் இல்லாமல் அவதிப்பட்டு வந்தோம் .இந்த நிலையில் அரசு சார்பில் அமைக்கப்பட்டது ஆனால் தற்போது வரை , முறையாக குடிநீர் டேங்க் வருவதில்லை மேலும் எங்களுக்கு என போடப்பட்ட போர்வெலில் , வெளியில் இருந்து ஒரு டிரக்டர் லோடு தண்ணீரைக் கொண்டு வந்து போரில் ஊற்றி மேல்நிலை டேங்க்கு வருவது போல் தண்ணீர் வரவளைத்து அதற்கான பில் தொகையை எடுக்க ஒப்பந்ததாரர்கள் முயற்சிக்கின்றனர்,
இது முறைப்படுத்தி சீரான குடிநீர் வினியோக செய்ய அரசு சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையெனில், இப்பகுதி மக்கள் சேர்ந்து கடத்தூர் யூனியன் அலுவலகம் முற்றுகையிட்டு காலி குடத்துடன் போராட்டம்
நடத்த போவதாகவும் தெரிவித்தார். .
ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் கூறுகையில் இந்த தண்ணீர் டே ங்கிற்கான போர்வெல்லில் தண்ணீர் இல்லை, முறையாக பைப் லைன் அமைக்கபடவில்லை. உள்ளிட்ட பல வேலைகள் முடிக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இதற்கான ஒப்புதல் பில் வழங்குமாறு சில அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர். மக்களின் அடிப்படை தேவைக்கான இந்த திட்டம் முறையாக செய்த பின்தான் ஊராட்சி சார்பில் ஒப்புதல் வழங்கபடும் இதற்காக யார் மிரட்டினாலும் வழங்க முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *