கே தாமோதரன் பல்லடம் செய்தியாளர் செல்:9842427520.
பல்லடத்தில் சட்ட விரோதமாக விற்பனைக்காக கடத்திவரப்பட்ட 785 கிலோ குட்கா பறிமுதல்…..
பெண் உட்பட எட்டு பேர் கைது….
ஒரு கார் உட்பட 3 வாகனங்கள் பறிமுதல்- போலீசார் அதிரடி நடவடிக்கை……
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன் வேல் ராஜன் 50. இவர் ஜல்லிபட்டியைச் சேர்ந்த கார்த்திகா 28 என்ற பெண்ணுடன் சேர்ந்து குட்கா வாங்க திட்டமிட்டுள்ளார்.
அப்போது அவர்கள் இருவரும் சுல்தான்பேட்டை பகுதியில் வசித்து வரும் ராகுல் என்பவரின் உதவியுடன் குட்கா வாங்க முயன்றனர். அதன்படி பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பியான சுதின் குமார் 28, சுனில் 30 ஆகிய இருவரின் மூலம் குட்காவானது கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து டிஎஸ்பி சுரேஷ் மற்றும் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் பல்லடம் அடுத்த அண்ணா நகர் பகுதியில் பதுங்கி இருந்தனர்.
அப்போது அப்பகுதிக்கு சந்தேகத்துக்கிடமாக வந்த வேனை நிறுத்தி பார்த்தபோது அதில் குட்கா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது . தொடர்ந்து வேனில் குட்கா மூட்டைகளை கடத்தி வந்த சுதன் குமார் 28, சுனில் 30, வினிஷ் 28, ரதீஷ் 40, சுதீஷ் 38 மற்றும் குட்கா மூட்டைகளை எடுத்து வர உதவியாக இருந்த ராகுல் மற்றும் குட்கா பொருள்களை வாங்க காத்திருந்த பொன் வேல் ராஜன் 50 கார்த்திகை 28 ஆகிய எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்
மேலும் அவர்களிடமிருந்து 785 கிலோ குட்கா பறிமுதல் செய்தனர் தொடர்ந்து குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பொலிரோ கார் பிக்கப் வாகனம் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர் இதனிடையே குட்கா கடத்தலில் தொடர்புடைய சுதின் குமார் மீது ஏற்கனவே பல்லடம் அடுத்த மங்களம் காவல் நிலையத்தில் குட்கா கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.