மதுரை நெல் பேட்டையில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக பெண்களின் பாதுகாப்பு , மனித சமுதாயத்தின் பொறுப்பு முழக்கத்துடன் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம், மதுரை நெல் பேட்டையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சமீமா தொகுப்புரையும், மாவட்ட பொதுச்செயலாளர் ஆபிதா வரவேற்புரையும் ஆற்றினர்.

மாவட்ட தலைவி நசரத் பேகம் தலைமை ய உரையும், மண்டலத் தலைவி கதிஜா பீவி கருத்துரையும் ஆற்றினர்.
இறுதியாக மாவட்ட செயலாளர் நிகார் பாத்திமா நன்றியுரை கூறினார்.இந்நிகழ்வில் பல பெண்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *