சீர்காழி, சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி,சீர்காழி பள்ளி வளாகத்தில் தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் மயிலாடுதுறை வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை, செம்பனார்கோயில், குத்தாலம்,சீர்காழி, கொள்ளிடம் ஆகிய ஒன்றியங்களில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கக்கூடிய அரசு உதவி பெறும் 400 பள்ளிகளை சார்ந்த 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போட்டிகள் நாடகம், பரதநாட்டியம், மணல் சிற்பம் செய்தல், பானைகளில் ஓவியம் வரைதல், கிராமிய நடனம், போன்ற பல்வேறு கலைகள் அடங்கிய 84 வகையிலான போட்டிகள் நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலிடம் பெறக்கூடிய மாணவ மாணவிகள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவார்கள்

இந்த மாவட்டப் போட்டிகளை மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறையின் சார்பில் நடத்தப்பட்டது அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட போட்டிகள் அனைத்தும் மயிலாடுதுறை மாவட்ட உதவி திட்ட அலுவலர் நா. திருஞானசம்பந்தம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரை பள்ளி தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி வரவேற்றார், நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், ச.மு. இந்து மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் எஸ்.முரளீதரன், என். துளசிரங்கன், டி. சீனிவாசன், மேலும் ஆசிரிய பயிற்றுநர்கள், ஏராளமான பெற்றோர்கள், பயிற்சி அளிக்கும் கலைஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள், போட்டியின் நடுவர்களாக பள்ளியின் கலை ஆசிரியர்கள், பகுதி நேர பயிற்றுநர்கள், கலை வல்லுநர்கள் பணியாற்றினார்கள்.

நிறைவாக மாவட்ட கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் ம.சரத் சந்திர யாதவ் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *