கோவை பூ மார்க்கெட் பகுதியில் வீடு, அலுவலகம் உள்ளிட்ட கட்டிடங்கள் தொடர்பான கட்டிடக்கலை பொருட்களை ஒரே இடத்தில் தேர்வு செய்யும் விதமாக கோவையில் வாரி ஆர்க்கிடெக்சுரல் சொல்யூஷன்ஸ் எனும் விற்பனை மையம் துவங்கப்பட்டது.
புதிய வீடு மற்றும் அலுவலகங்கள் கட்டுவோர் அதன் உட்புற அழகுகளை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
வீடுகள் கட்டும்போது தேவையான ஹார்டுவேர்ஸ் பொருட்கள் மற்றும் வீடுகளின் தோற்றங்களை அழகு படுத்துவதற்கான நவீன வகை பொருட்களை தனித்தனியே தேடி தேடி. போய் வாங்கும் சூழல் உள்ளது..
இந்நிலையில் கடந்த பனிரெண்டு ஆண்டுகளாக கட்டிடகலை தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வரும் வாரி ஆர்க்கிடெக்சுரல் நிறுவனம் தனது புதிய மையத்தை பூமார்கெட் அருகில் துவக்கி உள்ளது.
வீடுகள் கட்டும் போதே ஹார்டுவேர்ஸ் மற்றும் கட்டிடக்கலை அழகு தொடர்பான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் வகையில் புதிய வாரி ஆர்க்கிடெக்சுரல் சொல்யூஷன்ஸ் விற்பனை மையம்
துவங்கப்பட்டது…