மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் கீழச்சின்னணம்பட்டி ஊராட்சியில் ரூ 30.10, லட்சம் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அமைச்சர் பி.மூர்த்தி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி வைத்தார்.அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, கூடுதல் ஆட்சியர் மோனிகாராணா, சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், யூனியன் ஆணையாளர்கள் கலைச்செல்வி, வள்ளி, திமுக ஒன்றிய செயலாளர் தன்ராஜ், பரந்தாமன், திமுக பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் தர்மராஜா, திமுக நிர்வாகிகள் போஸ் (எ) அய்யனன், முருகேசன், கருப்பணன்,சேகர், முத்தையா, கதிரேசன், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் பிச்சை, நன்றி தெரிவித்தார்.