ஜூனியர் ரெட் கிராஸ் அரியலூர் மாவட்டம்
துணைக் குழு கூட்டம்

அரியலூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் துணைக் குழு கூட்டம் அரியலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்ட கன்வினர் சிவசங்கர் வரவேற்றார். அரியலூர் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்

அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .சிவானந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அரியலூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்ட செயலாளர், ஜூனியர் ரெட் கிராஸ் புரவலர் சண்முகம் முன்னிலை வகித்தார்.

துணைக் குழு கூட்டத்தில் 2024- 2025 கல்வி ஆண்டிற்கான ஆண்டு செயல்பாடு குறித்த வரையறை செய்யப்பட்டு துணைக் குழு உறுப்பினர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அனைத்து பள்ளிகளிலும் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அமைப்பில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்திட அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கேட்டுக்கொண்டார்.

கடந்த காலங்களில் அமைப்பின் செயல்பாடுகள் சிறப்பாக செயல்பட்டது போலவே அனைத்து பள்ளிகளிலும் உள்ள கவுன்சிலர்கள் சிறப்பாக அமைப்பினை வழி நடத்த மாவட்ட கல்வி அலுவலர் கேட்டுக் கொண்டார்.

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் அங்கமான ஜூனியர் ரெட் கிராஸ் செயல்பாடுகளை மாநில அமைப்பின் வழிகாட்டுதல் அடிப்படையில் சிறப்பாக செயல்படுத்திட செயலாளர் கேட்டுக் கொண்டார்.

துணைக் குழு உறுப்பினர்கள் இணை கன்வீனர்கள் செந்தில்குமரன், பிரபாவதி, தஸ்தகீர், மோகன், பிரகாச பனிமய ராஜ், ஜான்சன்

மண்டல அலுவலர்கள் முருகானந்தம், திருப்பதி, செல்வமுருகன், சண்முகவேல், வெங்கடாசலபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிறைவாக பொருளாளர் சேதுராமன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *