திண்டுக்கல் நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ஆம் ஆண்டு சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கிழக்கு மரியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சாலமன் செல்வராஜ்(20) என்பவரை போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பிரதீப், அறிவுறுத்தலின்படி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.முருகேஸ்வரி நீதிமன்ற தலைமை காவலர் அபிராமி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி சீரிய முயற்சியால் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி குற்றவாளி சாலமன் செல்வராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *