சின்னமனூர் நகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை
அறுவை சிகிச்சை நகராட்சி அதிரடி தேனி மாவட்டம் சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளருக்கு பல்வேறு புகார்கள் பொதுமக்கள் தரப்பிலிருந்து வரப்பட்டன மேலும் நகராட்சி நகர் மன்ற கூட்டத்திலும் நகர் மன்ற உறுப்பினர்கள் தெரு நாய்களால் பொதுமக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருவதாகவும் நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவின் பேரில் நகராட்சி பகுதிகளில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் 200க்கும் மேற்பட்டவைகளை வலை போட்டு பிடித்து நகராட்சி துப்புரவு லாரி மூலம் அய்யனார் புரத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் நாய்களுக்கான பிரத்யேகமான கருத்தடை ஆபரேஷன் தியேட்டர் மற்றும் தொடர் சிகிச்சை பராமரிப்பு வசதிகள் உள்ளடக்கிய மையத்தில் கருத்தடை செய்யும் பணி துவங்கியது.
நகர் மன்ற தலைவர் அய்யம்மாள் ராமு ஆணையாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலையிலும் கால்நடை பராமரிப்பு துறை கோட்ட உதவி இயக்குனர் சிவராத்தினா கால்நடை உதவி மருத்துவர்கள் வினோத் சுதர்சன் மௌனிகா குப்பமுத்து ஆகிய மருத்துவ குழு நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்தனர்.
இந்த கருத்தடை ஆபரேஷன் முகாமில் 200க்கும் மேற்பட்ட நாய்கள் கருத்தடை ஆபரேஷன் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது