திராவிட இயக்க வரலாறு, திராவிட மாடல் அரசின் சாதனைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையிலும், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாகவும் நடத்தப்படும் கனிமொழி கருணாநிதி எம்.பியின் முன்னெடுப்பில் நடைபெறும் ‘கலைஞர் 100 வினாடி வினா’ போட்டியின் அரையிறுதி போட்டி சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இன்று தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு, சென்னை காமராஜர் சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் நினைவிடத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலைஞர் 100 வினாடி வினா அரையிறுதி போட்டியில் பங்குபெறும் போட்டியாளர்களுடன் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும், போட்டியாளர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.