கும்பகோணம் அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அதிமுக முன்னாள் நகராட்சி கவுன்சிலர் வெளிநடப்பு.
தஞ்சை கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் கள ஆய்வு ஆலோசனை கூட்டம் கும்பகோணம் காஞ்சி சங்கரா மஹாலில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.கே. பாரதிமோகன் தலைமை தாங்கினார்.மாநகர செயலாளர் ராமநாதன்,ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், ஏ. வி.கே.அசோக் குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.சிறப்பு அழைப்பாளராக கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்,கழக அமைப்புச் செயலாளர் தங்கமணி,காமராஜ்,மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.
அப்போது திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது :-
தமிழகத்தில் திமுக ஆட்சியில் போதைப் பொருட்கள் கலாச்சாரம் நடைபெறுகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள்
பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக கருத்துக்களை கூறாமல் ஆர்.எஸ் பாரதி போன்றவர்களை வைத்து கருத்துகள் கூறி மக்களை திசை திருப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் குடியிருப்பு வாசிகளுக்கு ரூ. 700 ரூபாய் வந்த மின் கட்டணம் தற்போது ரூ.1500 வரை திமுக ஆட்சியில் வசூல் செய்யப்படுகிறது.
இதனால் மின்சார கட்டண உயர்வால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மார்க் மதுபான கடைகளில்
கூடுதலாக தொகை வைத்து மது விற்கப்படுகிறது.
விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்த ஆட்சி தான் தி.மு.க.
கட்டுமான துறையில் விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு தமிழகத்தில் விண்ணை முட்டும் அளவில் உள்ளது.
திமுக ஆட்சியில் செய்த சாதனைகளையும், அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை மேடைகள் போட்டு கலந்துரையாட எடப்பாடி பழனிச்சாமி அழைத்திருந்தார். ஆனால் இதுவரை திமுகவிலிருந்து எந்தவித அறிவிப்பும் வரவில்லை.திமுக ஆட்சி அமைந்த உடன் நீட் தேர்வு ரத்து என்று அறிவித்தார்கள் ஆனால் தற்போது தமிழகத்தில் நீட் நிலை என்ன?
அதானி குடும்பத்தின் பல ஆயிரம் கோடி நஷ்டம் அடைந்து வருகிறது. ஆனால் மு க ஸ்டாலினை அதானினையை நேரடியாக பார்த்து வந்துள்ளார்.இடையில் நடந்த பேரம் என்ன?
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக திண்டுக்கல் சீனிவாசன் மேடையில் பேசிய முற்பட்டபோது அதிமுக முன்னாள் நகராட்சி கவுன்சிலர் அம்பிகாபதி தன்னை பேச விட வேண்டும், கட்சி தொண்டர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை,அது மட்டும் இல்லாமல் தொண்டர்களிடம் குறைகள் கேட்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனை கூட்டத்தில் கோஷங்கள் எழுப்பினார் அப்போது பேச முயன்ற திண்டுக்கல் சீனிவாசன் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி அவரது இருக்கையிலேயே அமர்ந்துவிட்டார்.பின்னர் அவரை அதிமுக கட்சியினர் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.