செங்குன்றத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து மர்ம நபர் கொள்ளை முயற்சி.
அலாரம் அடித்ததால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொள்ளையனை பிடித்து விசாரணை.
செங்குன்றம் செய்தியாளர்
சென்னை செங்குன்றம் கொல்கத்தா நெடுஞ்சாலை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் முதல் மாடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது.
இந்த வங்கியில் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் ஜன்னல் கம்பியை ஆக்ஸா பிளேடால் அறுத்து எடுத்து வங்கிக்குள் சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
அப்போது வங்கியில் இருந்த அலாரம் ஒலித்ததால் வங்கியின் மேலாளர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்தார்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ரோந்து போலீசார் கொள்ளையன் ஏடிஎம் மிஷின் உள்ளேயே பதுங்கி இருப்பதை உறுதி செய்தனர்.
இதனை அடுத்து செங்குன்றம் போலீசார் லாவகமாக கொள்ளையனை பிடித்து செங்குன்றம் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணையில் ஆவடி , வீராபுரத்தை சேர்ந்த சுரேஷ் ( வயது 45 ) என்பது தெரியவந்தது. இதுகுறித்து செங்குன்றம் குற்றப்பிரிவு ஆய்வாளர் லதா மகேஸ்வரி வழக்கு பதிவு செய்து
தொடர்ந்து கொள்ளையன் வேறு எங்கெல்லாம் இதே போன்ற கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார். மேலும்
வங்கியில் உள்ள அலாரம் அடித்ததால் அங்கிருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம் தப்பி உள்ளது. வங்கியின் ஜன்னல் கம்பியை அறுத்து கொள்ளையடித்த முயன்ற சம்பவத்தில் செங்குன்றம் போலீசார் துரிதமாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.