கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்.
பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு ரூ.8.50.லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் வழங்கினார்….

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் லிமிடெட் சமுதாய பொறுப்புணர்வு திட்டத்திலிருந்து ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், கும்பகோணம் பரஸ்பர சகாயநிதி லிமிடெட் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான
சு.கல்யாணசுந்தரம் மருத்துவமனை பயன்பாட்டிற்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் குமரவேல், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலிக் கபிலன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோவி.அய்யாராசு, துரைமுருகன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் பேரூர் நகர செயலாளர் கபிலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி பொறுப்பாளர் செல்வகுமார், பாபநாசம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஹேமாவதி, கவிதா, செவிலியர் கண்காணிப்பாளர் பவுலின் மேரி, செவிலியர் வேலுமணி, மருந்தாளுனர் செழியன், பேரூராட்சி கவுன்சிலர்கள் பிரகாஷ், ஜாபர் அலி மற்றும் மாவட்ட ஒன்றிய ,பேரூர், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.