கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
பாபநாசம் ஒன்றிய, பேரூர் திமுக அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 21 ஆம் ஆண்டு நினைவு நாள்…
மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றிய பேரூர் திமுக அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் பாபநாசம் முன்னாள் நகர செயலாளர் கே .கதிரேசன் 13-வது நினைவு நாள் முன்னிட்டு அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது .
இந்நிகழ்ச்சியில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான
சு. கல்யாணசுந்தரம் கலந்துகொண்டு இருவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் கோவி.அய்யாராசு , துரைமுருகன், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன், பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் ,ஊராட்சி,கிளை கழக நிர்வாகிகளும் சார்பணி நிர்வாகிகளும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.