கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
கும்பகோணம் அருகே திருவையாறு ஔவை மழலையர் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவையாறில் உள்ள ஔவை மழலையர் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலியபெருமாள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் மாணவர்கள் அறிவுத்திறனைக் கொண்டு கடல் நீரை குடிநீராக மாற்றும் இயந்திரமும், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறையும் மற்றும் நிழல் நடுக்கம் அதிர்வை வருவதை அலாரம் மூலம் கண்டுபிடிக்கும் அலார மணியை கண்டுபிடித்துள்ளனர். மேலும் நீராவி மோட்டார் இயந்திரமும் ,மண் வயல் காடு போன்ற ஐந்திணைகளை பற்றியும், கீரை வகைகள் பற்றியும், மனிதனின் உடற்பகங்களை பற்றியும் , அப்துல் கலாம் உருவப்படம், சந்திராயன் 3, சூரிய குடும்பம் என நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் அறிவியல் திறனை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் கண்ணகி கலைவேந்தன் மருத்துவர் சங்கமித்ரா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர்.
இதில் தலைமை ஆசிரியர் கோகிலா அறிவியல் ஆசிரியர் மஞ்சுளா, மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.