ராஜபாளையம் வனத்துறை சார்பில் காலநிலை மாற்றம் பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி!
விருதுநகர் மாவட்ட கால நிலை மாற்ற இயக்கம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப் பகம் சார்பில் விவசாயி களுக்கு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.
ராஜபாளையம் வனச் சரக அலுவலர் கார்த்தி கேயன் வரவேற்றார். சுவாமிநாதன் ஆராய்ச்சி கட்டளை விஞ்ஞானி கோபிநாத் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப நீடித்த நிலையான பயிரிடும் முறை குறித்து பேசுகை யில், காலநிலை மாற்றம் என்பது பூமி முழுவதும் பரவிய முக்கிய பிரச்னை. அது விவசாயத்தையும்
தாக்குகிறது.
விவசாயம் வாழ்வா தாரத்தின் அடிப்படை. ஆகவே கால நிலை மாற் றத்தால் ஏற்படும் தாக்கங் களை எதிர்கொள்ள ஒரு நிலையான பயிர் விவசாய முறையை உருவாக்குவது மிகவும் அவசியம். இதன் மூலம் விவசாயிகள் தங்க ளின் உற்பத்தி மட்டத்தை உயர்த்தி சுற்றுச்சூழலுக்கு எதிரான விளைவுகளை குறைத்துக் கொள்ள முடி யும் என விளக்கினார். முடிவில் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக் கம் அளித்தார்.
ஸ்ரீவில்லிபுத்துார், ராஜ பாளையம் வட்டாரங் களில் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டனர்