கோவையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்.குமார் கட்டுமான தொழிலாளர் நலவாரிய அலுவலகங்களை ஆய்வு மேற்கொண்டார்.
இதில், தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்தில் பயன் பெறும் பதிவு பெற்ற தொழிலாளர்களின் ஆவணங்களை அவர் ஆய்வு செய்தார்..
இதனை தொடர்ந்து கோவை உக்கடம் பகுதியில் உள்ள கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்..
கொங்கு மண்டல தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் நடைபெற்றத்தில்,
கோவையில் நடைபெற உள்ள தொழிலாளர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து அமைப்பு சாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடினார்..
மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் கணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.
மேலும் மாநாட்டில் நலவாரியத்தில் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்களை தொழிலாளர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நடைபெற உள்ள தொழிலாளர்கள் மாநாட்டில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது..
இதில் பேசிய நலவாரிய தலைவர் பொன்குமார்,
திராவிட மாடல் ஆட்சியில் நலவாரியம் மூலம் வழங்கப்படும் தொகை இரட்டிப்பு ஆக்கப்பட்டுள்ளதாகவும்,
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இவ்வளவு திட்டங்கள் இல்லை. தமிழ்நாடுதான் எல்லாவற்றுக்கும் முன் மாதிரி மாநிலமாக திகழ்வதாக அவர் பேசினார்..
தொழிலாளர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டு கூறிய அவர்,இதனை தொழிலாளர்கள் சரியான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார்..
நிகழ்ச்சியில் பிறந்த நாள். கொண்டாடும் பொது செயலாளர் குரு நாகலிங்கத்திற்கு பிறந்தாள் வாழ்த்துக்களை அவர் தெரிவித்தார்..