கே.ஆர். பி. அணையில் காமராஜரின் முழு உருவ சிலை வைக்க முன்னாள் காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணி கலெக்டரிடம் கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயுவை கிருஷ் ணகிரி கிழக்கு மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் எல்.சுப்பிர மணியன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று சந்தித்தனர்
அவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 2017-ம் ஆண்டு முதல் காமராஜரின் உருவ முழு வெண்கல சிலையை கே.ஆர்.பி. அணையில் வைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன
இதுவரையில் அனுமதி கிடைக்கவில்லை. கடந்த 2017-ம் ஆண்டு அப்போ தைய கலெக்டரிடம் சிலை அமைக்க அனுமதி கேட்டு, அது தொடர்பாக பல அரசு துறைகளிடம் இருந்து ஆவணங்கள் பெறப்பட்டு ள்ளன.
எனவே காமராஜரின் உருவ முழு வெண்கல சிலையை காங்கிரஸ் கட்சி சார்பில் அமைத்து அரசிடம் ஒப்படைக்க அனுமதி வழங்க கேட்டுக் கொள்கி றேன்
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது