கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் பிரபாகரன் பிறந்தநாள் விழா…
நாம் தமிழர் கட்சி வே.பிரபாகரன் சார்பில்
இரத்ததான முகாம்…..
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பிறந்த நாளை முன்னிட்டு . பாவ்ஸார் ஸ்ரீ பாண்டுரங்கன் பஜனை மடத்தில் இரத்ததான முகாம் மற்றும் மாவீரர் நாள் அனுசரிப்பு நடைபெற்றது.
முகாமில் முன்னதாக கும்பகோணத் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் மோ.ஆனந்த் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் மணி. செந்தில் இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் இர.அசோக் தலைமை தாங்கினார்.
தஞ்சை வடக்கு மண்டல செயலாளர் ச சாமிநாதன்,மாவட்டத் தலைவர் மு.சோ.கந்தன்,மாவட்ட பொருளாளர் பி அருண்குமார், வடக்குத் தொண்டர் அணி செயலாளர் ம சுந்தர்ராஜன்,மாநில தொண்டர் அணி செயலாளர் மா விஜய் ஆனந்த்,தெற்கு தொண்டர் அணி செயலாளர் க ராஜராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
.
தொடர்ந்து இரத்ததான முகாமில் 50-ற்கு மேற்பட்டோர் நிர்வாகிகள் பங்கேற்று இரத்த தானம் செய்தனர். நிறைவில் மாவட்ட செய்தி தொடர்பாளர் ப.மணிகண்டன் நன்றி கூறினார்