யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பாக 190 வது வார மரக்கன்றுகள் நடும் விழா நடிகர் விவேக் பிறந்தநாளை முன்னிட்டு ஒத்தக்கடை வர்ஷா கார்டனில் நடைபெற்றது. யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் தலைமையாசிரியர் தென்னவன் தலைமை வகித்தார்.
யானைமலை கிரீன் பவுண்டேஷன் ஆலோசகர் சிலம்பம் மாஸ்டர் பாண்டி முன்னிலை வகித்தார். ஆலோசகர் ராகேஷ் வரவேற்றார். உறுப்பினர் பாலமுருகன் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக திருமோகூர் ஊராட்சி மன்றத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.
மரங்களின் பயன்கள், சுற்றுச்சூழல், எல்நோ, மழை வேறுபாடு, உயரும் வெப்பநிலை ஆகியன குறித்து அண்ணாமலை சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்விற்கு தேவையான வேம்பு , புங்கை மரங்கள் மற்றும் வலைகளை பரமேஸ்வரன் அவர்கள் வழங்கினார். விழாவில் பசுமை சாம்பியன் அசோக்குமார், பாலமுருகன், வர்ஷா கார்டன் நிர்வாகிகள், பணியாளர்கள், சமூக ஆர்வலர் பாஸ்கரன், செல்வி, ராஜாத்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளால் மரங்கள் நடப்பட்டது. நிகழ்வில் பெற்றோர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டு மரங்கள் நட்டனர். மாணவி பூஜா ஸ்ரீ நன்றி கூறினார்.