போலீஸ் அக்கா திட்டம் மாணவிகளிடம் சிறப்பான வரவேற்பு
தென்காசி
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் உள்ள எஸ் ஆர் எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்
தென்காசி காவல் கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின்படி செங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் பள்ளி மாணவிகளுக்கு பள்ளி நாட்களில் இரு நேரமும் பாதுகாப்புகளை சிறப்பாக செய்து வரும் காவல் உதவி ஆய்வாளர் செல்வி மற்றும் காவல்துறையினரை மாணவிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர் மாணவிகளின் பாதுகாப்பு குறித்து தினமும் அறிவுரைகளை வழங்கி வருவது மாணவிகளுக்கு மிகுந்த உற்சாகத்தையும் பாதுகாப்பாக உணர்வதாக பள்ளி மாணவிகள் கூறி வருவது குறிப்பிடத்தக்கது