தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர் ஜும்மா பள்ளிவாசல் முன்பு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் எம். ஜெயினுல் ஆபிதீன் தலைமையில் உத்திர பிரதேசம் ஷாஹி ஜமா மஸ்ஜித்தில் நிகழ்ந்த வன்முறையை கண்டித்தும், சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தியும், மத வழிபாட்டு தலங்கள் சட்டம் 1991 நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகரன், திமுக மாவட்ட பொருளாளர் எல்.ஜி .அண்ணா, காங்கிரஸ் தஞ்சை மாநகர மாவட்ட தலைவர் பி.ஜி.ராஜேந்திரன், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக செந்தில்குமார், தமிழ்நாடு சிறுபான்மை நல குழு சார்பாக அப்துல் நசீர், குருசாமி, இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளர் துரை.மதிவாணன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் அப்துல்லா, மற்றும் ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முகமது இக்பால், மக்கள் செய்தி தொடர்பாளர் ஷேக் அப்துல்லா உள்ளிட்டு ஏராளமானோர் பங்கேற்றனர்.