கோவை புலியகுளம் பகுதியில் கேரளா பத்தாவது அசோசியேஷன் சார்பில் புத்தாண்டு மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் சோ.ஜோ அருண் மற்றும் ஆணையத்தின் உறுப்பினர் முகமது ரஃபிக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிறுபான்மை ஆணையத்தின் தலைவர் சோ.ஜோ அருண், அனைத்து தரப்பு சிறுபான்மை மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை கொடுத்து வருவதாகவும்,சிறுபான்மை மக்களின் பிரச்சனைகள்,திட்டங்கள்,குறித்து மாவட்ட வாரியாக ஆட்சியர் முன்னிலையில் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்பட்டு அதன் மூலம் 70 சதவீத பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் தமிழக முதலமைச்சர் மாநில முழுவதும் உள்ள சிறுபான்மை மக்களின் கோரிக்கைகளை பெற்று அதனை தீர்க்க வேண்டும் என கூறியதனின் அடிப்படையில் டிசம்பர் 30 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையினரின் நிறை குறைகள் கேட்டறிந்து அதனை முழுமையாக நிவர்த்தி செய்யப்படும் என அவர் தெரிவித்தார்…