தேனி மாவட்டம் கோட்டூர் ஏ. டி துவக்கப்பள்ளி மூன்றாம் வகுப்பு மாணவர் மழழைச்செல்வமான வி.விபுல்வேல் சிறு வயதிலேயே களிமண் மூலம் பொம்மை செய்தல் போட்டியில் தேனி தாலுகா அளவில் முதலிடமும் , மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவி ரித்திகா மாறுவேடம் போட்டியில் தேனி மாவட்ட
அளவிலேயே முதலிடமும் பெற்று பெருமை சேர்த்த மழைச்
செல்வங்களுக்கு ஏ.டி துவக்கப்பள்ளி நிறுவனத் தலைவர் வேல்ச்சாமி பள்ளியின் செயலாளர் ரத்தினம் தலைமை ஆசிரியை கௌசல்யா ஆகியோர் தலைமையில் கோட்டூர் ஹீரோ ஸ்டார் கூட்டமைப்புசார்பில் சர்வதேச குழந்தைகள் தினம் விழா மற்றும் சாதனை படைத்த மாணவர்களை பாராட்டு விழா நடைபெற்றது.
பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பள்ளி ஆசிரியர் டி.யுரேநிதா தமிழ் வேந்தன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்
விழாவில் கோட்டூர் நாம் தமிழர் கட்சி பிரமுகர் ராஜா
ஹீரோ ஸ்டார் இயக்க நிர்வாகியும் விரிவுரையாளர் வேல்முருகன் ஹீரோ ஸ்டார் இந்திய அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் ஜெயப்பிரகாஷ் இந்திய ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை வாழ்த்தி பேசினார்கள் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஹீரோ ஸ்டார் ராஜதுரை மற்றும் நிர்வாகிகள் வெகு சிறப்பாக சிறப்பாக செய்து இருந்தனர்.