முதல்வர் ஸ்டாலினே பகுதிநேர ஆசிரியர்களின்
பணி நிரந்தரத்திற்கு பொறுப்பு :
12 ஆயிரம் பேர் நான்கு ஆண்டாக காத்திருப்பு :
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் கோரிக்கை :
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என தேர்தலின்போது சொன்ன இன்றைய முதல்வர் ஸ்டாலின்
இதுவரை வெறும் 2,500 ரூபாய் சம்பள உயர்வை மட்டுமே வழங்கி உள்ளார்.இதனால் தற்போது 12,500 ரூபாய் சம்பளம் கிடைக்கிறது.
இன்றைய விலைவாசியில் இதை வைத்து குடும்பங்களை நடத்த முடியவில்லை. இதில் மே மாதம் சம்பளம்,போனஸ்,வருங்கால வைப்பு நிதி,மருத்துவ காப்பீடு,இறந்தவர் குடும்பத்திற்கு நிதி போன்றவை கிடையாது.
இதனால் தற்போதுள்ள 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டு முதல் இதோடு 13 ஆண்டுகளாக தற்காலிக நிலையில் உள்ள பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்தால் மட்டுமே, காலமுறை சம்பளம் கிடைக்கும். எனவே முதல்வர் ஸ்டாலின் திமுக தேர்தலில் சொன்ன 181-வது வாக்குறுதியை அரசாணையாக்க வேண்டும். நீண்டகாலமாக தற்காலிகமாக பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி பாடத்தில் 3700 பேர்,ஓவியம் பாடத்தில் 3700 பேர்,கணினி அறிவியல் பாடத்தில் 2 ஆயிரம் பேர்,தையல் பாடத்தில் 1700 பேர்,இசை பாடத்தில் 300 பேர்,தோட்டக்கலை பாடத்தில் 20 பேர்,கட்டிடக்கலை பாடத்தில் 60 பேர்,வாழ்வியல் திறன் பாடத்தில் 200 பேர் எனபணிபுரிகின்ற
மொத்தம் பன்னிரண்டாயிரம் பேரை,பணி நிரந்தரம் செய்ய,வாழ்வாதாரம் வழங்க,பணிப்பாதுகாப்பு வழங்க,முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.
—
S.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு.
Cell : 9487257203