திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் கிராம ஊராட்சி சேவை மைய கட்டிடத்தில் 2023-2024 ஆண்டுக்கான தேசிய ஊரக வேலை உறுதி திட்ட சமூக தணிக்கை மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் 2016-2017 முதல் 2023- 2024 முடிய சமூக தணிக்கை கிராமசபா கூட்டம் கடந்த 25-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் ராதிகா, வட்டார வள அலுவலர் மஞ்சனிக்கூத்தர், ஊராட்சி மன்ற தலைவர் ஆர். கலையரசி ரங்கராஜன், துணைத் தலைவர் எம். விமலா ராணி, ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் ஆர். உஷா,கே. மணி, கே. துரைராஜ், ஏ.சோம சுந்தரம், எஸ். வள்ளி, ஏ. சரோஜா, சி. சௌந்தர் ராஜன், சு. பிரியதர்ஷினி மற்றும் ஊராட்சி செயலாளர் எம். சிவசங்கரன் மற்றும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.