திருவாரூரில் உலக எய்ட்ஸ் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஹோட்டல் செல்விஸ். டைமன் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றது
திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் திருவாரூர் பூண்டி கே. கலைவாணன் திருத்துறைப்பூண்டி மாரிமுத்து கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டு விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஆட்டோக்களில் ஒட்டி மனித சங்கிலியில் பங்கேற்று எச்ஐவி பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கினார்கள்
நிகழ்வில் பூண்டி கே கலைவாணன் எம் எல் ஏ பேசுகையில் திருவாரூர் மாவட்டத்தில் எச் ஐ வி தொற்றுகள் இல்லாத மாவட்டமாக மாற்ற உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எய்ட்ஸ் நோய் தொடர்பான இறப்புக்கள் இல்லாத நிலைமையை உருவாக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது
எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்கக் கூடாது புதியதாக எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகாமல் இருக்க விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
என்றார். பங்கேற்றவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி எய்ட்ஸ் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் விழிப்புணர்வு நிகழ்வில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலர் காசநோய் துணை இயக்குனர் மருத்துவர் புகழ் திருவாரூர் நகர மன்ற தலைவர் புவனப்பிரியா செந்தில் திருவாரூர் இதயம் பவுண்டேஷன் திட்ட இயக்குனர் குழந்தைவேலு தமிழ்நாடு தனியார் திறன் பயிற்சி கல்லூரி கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் நன்கொடை வழங்கிய அனைவருக்கும் அமைப்பின் சார்பில் சான்றிதழ் வழங்கி சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர்
நிகழ்வின் இறுதியாக மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அழகு மாவட்ட மேற்பார்வையாளர் எஸ் ராமஜெயம் நன்றி கூறினார்