அரூர் பேரூராட்சி தூய்மை பணியாளர் குடியிருப்பு பகுதிகளில் பழுது மற்றும் மீட்புப் பணி அரூர் அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் ஆய்வு செய்தார்
தர்மபுரி மாவட்டம் அரூர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர் மற்றும் துப்புரவு காவலர்களுக்கு அவர்கள் குடியிருக்கும் வீடுகள் பழுது ஏற்பட்டு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தன , இந்தப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் பட்டா வழங்கப்படாமல் உள்ளது, பேரூராட்சி பகுதியில் குடியிருந்து வருகிற இவர்களுக்கு அரசு குடியிருப்புகள் மற்றும் சொந்த வீடு கட்டிக் கொள்ள அரசு சார்பில் பட்டா வழங்க அதிமுக எம்எல்ஏ சம்பத்குமார் இடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தன , மேலும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரண்டு வீடுகள் இடிந்த நிலையில் அதனை நேரில் ஆய்வு செய்தார் ,
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழகச் செயலாளர் பசுபதி. நகரக் கழகச் செயலாளர் பாபு,கவுன்சிலர் காதர்,கலைவாணன், பூபதி , சிந்து. அரூர் வட்டாட்சியர் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இந்த ஆய்வின்போது உடன் இருந்தனர் ,