இராமநாதபுரம் மாவட்டம் ரெகுநாதபுரம் பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக அரசால் தடைசெய்யப்பட்ட 705.385 கிலோ புகையிலை பொருட்களை வாகனத்தில் கடத்தி வந்த செய்யது இப்ராகிம், செய்யது ஜமால் மற்றும் சரவணன் ஆகிய மூன்று நபர்களையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து 705. 385 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விரைவாகச் செயல்பட்டு சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்த தலைமை காவலர் .கருப்பசாமி, பட்டாபிராமன், முதல் நிலை காவலர்கள் மணிகண்டன், சிவகுமார், முனீஸ்வரன் ஆகியோர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ். அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்கள்.