டிசம்பர் 6 பாபர் மசூதி தகர்க்கப்பட்ட தினத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் – SDPI கட்சியின் கோவை மண்டல கூட்டம்த்தில் தீர்மானம்!
கோவை மண்டல எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஆலோசனை கூட்டம் கோவை மண்டல தலைவர் K.ராஜா உசேன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினரும், கோவை மண்டல செயலாளருமான M.E.அப்துல் ஹக்கீம் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொருலாளர் கோவை.முஸ்தபா மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் வேலூர் பயாஸ் அஹமது ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
கூட்டத்தில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி இடஒதுக்கீடு மற்றும் சிறைவாசிகள் விடுதலை கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் நடைபெற்ற மாபெரும் பிரம்மாண்ட பேரணி சம்பந்தமான மீளாய்வு நடைபெற்றது.
திருப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க SDPI கட்சியின் 10வது மாநில பொதுக்குழு கூட்டத்த்தின் ஏற்படுகளை மிகச் சிறப்பாக செய்த திருப்பூர் தெற்கு மற்றும் திருப்பூர் வடக்கு மாவட்ட நிர்வாகத்திற்கும், ஒத்துழைப்பு வழங்கிய கோவை மண்டலத்திற்குட்பட்ட அனைத்து மாவட்டத்திற்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
பாபாரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட பாசிச எதிர்ப்பு நாளான டிசம்பர் 6 அன்று மாநில தலைமையில் உத்தரவுக்கினங்க கோவை மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கோவை மண்டலத்துக்குற்பட்ட நீலகிரி மேற்கு தலைவர் பசீர், சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அப்சர் அலி, சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஷெரிப் பாஷா, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் VCan.பாபு, தெற்கு மாவட்ட தலைவர் ஹாரிஸ் பாபு, பொதுச்செயலாளர் மன்சூர் அஹமது, ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் முஹசின் காமினூன், பொதுச்செயலாளர் சமீருல்லா, கோவை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் அப்பாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.